"தோனியை அணியில் சேர்க்க 10 நாள்கள் வாக்குவாதம்"- முன்னாள் தேர்வாளர் கிரண் மோரே

தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்ய அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியுடன் 10 நாள்கள் வாக்குவாதம் செய்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கிரண் மோரே "இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் முறைகள் மாறிக்கொண்டிருந்தபோது பேட்டிங் வரிசையில் 6, 7 ஆவது இடத்தில் களம் இறங்கி அதிரடி காட்டுபவராக இருக்க வேண்டும் என எண்ணிணோம். அப்போது தான் தோனியை உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்த நிலையில் தோனி மட்டும் 130 ரன்களை விளாசி இருந்தார். இதை பார்த்து நான் வியப்படைந்தேன்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "இதனால் தோனிக்கு அணியில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கங்குலியிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப்தாஸ் குப்தா ஏற்கெனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார். பின்னர் கங்குலியை சமாதானப்படுத்த எங்களுக்கு 10 நாள்கள் தேவைப்பட்டது. தோனிக்காக கங்குலியுடன் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்" என்றார் கிரண் மோரே.

இந்திய அணியில் 2006 இல் இடம் பெற்ற தோனி பல சாதனைகளுக்கு பின்பு சொந்தக்காரரானார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை , ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை பெற்றுத் தந்த தோனி கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z0vpIv
via IFTTT

Post a Comment

0 Comments