
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியின் வழிகாட்டுதலை ரொம்பவே மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ். ஃபார்ம் அவுட்டாகி உள்ள காரணத்தினால் அணியில் இடம் பிடிப்பது அவருக்கு சவாலான காரியமாக உள்ளது. இந்நிலையில் இதனை குல்தீப் தெரிவித்துள்ளார்.
“களத்தில் நான் தோனியின் அனுபவமிக்க வழிகாட்டுதலை மிஸ் செய்கிறேன். அவர் ஸ்டெம்புக்கு பின்னால் நின்று கொண்டு சிறப்பாக எங்களுக்கு ஆலோசனை கொடுப்பார். அவரது குரல் உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இப்போது அந்த பணியை ரிஷப் செய்கிறார். எதிர்காலத்தில் அவரது அனுபவம் அணிக்கு கைகொடுக்கும். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிர்முனையில் இருக்கும் கீப்பர் உத்வேகம் கொடுப்பது அவசியம் என கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Kuldeep Yadav misses MS Dhoni the most behind the stumps both as a captain & as a cheerleader. @msdhoni @imkuldeep18 #TeamIndia pic.twitter.com/UcDvQTy7XH
— Anushmita.? (@anushmita7) May 12, 2021
தோனியுடன் இணைந்து 47 ஒருநாள் போட்டிகளில் குல்தீப் விளையாடி உள்ளார். அதில் 91 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். தோனியின் ஓய்வுக்கு பிறகு 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள குல்தீப் வெறும் 14 விக்கெட்டுகளை தான் கைப்பற்றி உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33C5ybq
via IFTTT
0 Comments
Thanks for reading