
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் மற்றும் அவரது நண்பர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு டெல்லி காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது.
சட்ரசால் மைதானத்தில் மல்யுத்த வீரர் சாகர் ரானா அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சுஷில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள சுஷில்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஷில்குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், அவரது நண்பர் அஜய் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bAsQCD
via IFTTT
0 Comments
Thanks for reading