“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவுடன் விளையாடுவது உற்சாகமானது!” - வில்லியம்சன்

வரும் ஜூன் 18 - 22 தேதிகளில் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவது தனக்கு உற்சாகம் கொடுப்பதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவது சவாலான காரியம். அதனால் தான் சொல்கிறேன் இந்தியாவுடன் விளையாடுவது உற்சாகமானது என்று. அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என்றால் சொல்ல வேண்டாம். அந்த உற்சாகத்திற்கு எல்லையே கிடையாது. அதோடு அதில் கிடைக்கும் வெற்றி ஆகச்சிறந்த ஒன்று” என வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி வரும் ஜூன் 2 ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3frSY3R
via IFTTT

Post a Comment

0 Comments