“ஐபிஎல் தொடரிலிருந்து நான் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை!” - வர்ணனையாளர் ஸ்லாட்டர் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். 

அதோடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கொரோனா அச்சம் காரணமாக தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு தங்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ‘அது முடியவே முடியாது’ என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன். 

அதனை மேற்கோள் காட்டி பிரதமரின் முடிவை ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார் மைக்கேல் ஸ்லாட்டர். ‘பணத்திற்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வைத்து சென்றவர்கள் எல்லாம் இப்படி பேசக்கூடாது’ என விமர்சித்திருந்தனர் ட்விட்டர் பயனர்கள். 

அதற்கு மைக்கேல் ஸ்லாட்டர் தற்போது பதில் கொடுத்துள்ளார் “பணத்திற்காக என நினைப்பவர்களுக்காக. அந்த விமர்சனத்தை நான் உயிர் வாழ்வதற்காக வைத்திருந்தேன். தொடக்கத்திலேயே ஐபிஎல் தொடரிலிருந்து விலகி விட்டதால் ஒரு பைசா கூட நான் ஈட்டவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வசை பாடுவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உயிர் நீத்து கொண்டிருக்கும் மக்களை குறித்து சிந்தியுங்கள். அது தான் கரிசனம். அது எங்கள் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்!” என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் மைக்கேல் ஸ்லாட்டர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nNs5en
via IFTTT

Post a Comment

0 Comments