
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ, தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை டாக் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள். குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவைதான் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நம்மால் நமது குடும்பத்தினர்கள் பாதிக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் சாம்பியன்கள். விரைவில் கொரோனாவிலிருந்து மீள்வீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Worried about the rising numbers in #covid-19 cases in Tamilnadu .
— Dwayne DJ Bravo (@DJBravo47) May 22, 2021
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.@mkstalin @Udhaystalin pic.twitter.com/wdEky6M1uB
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3u7gdWl
via IFTTT
0 Comments
Thanks for reading