
“விராட் கோலி 70 சதங்களை பதிவு செய்துள்ளார்”- மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சல்மான் பட்
“மூன்று விதமான கிரிக்கெட் பார்மெட்டிலும் இந்திய கேப்டன் கோலியை விட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தான் சிறந்தவர். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் கோலிக்கு கிடைத்த அங்கீகாரம் வில்லியம்சனுக்கு கிடைக்கவில்லை” என சொல்லி இருந்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். இந்த சூழலில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை பதிவு செய்துள்ளார் என வாகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.
“உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டை சேர்ந்தவர் விராட் கோலி. அதனால் அவருக்கு பெருத்த ரசிகர்கள் கூட்டம் இருப்பது இயல்பான ஒன்று. இதை தவிர அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். அதனை பலமுறை அவர் நிரூபித்துள்ளார். அவர் சர்வதேச போட்டிகளில் 70 சதங்களை பதிவு செய்துள்ளார். இன்றைய சமகால கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த வீரரும் எட்டவில்லை. சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையிலும் அவர் கோலோச்சியவர். அதனால் கோலியை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது.
இவை அனைத்திற்கும் மேலாக இதனை சொல்வது மைக்கேல் வாகன். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் சதமே பதிவு செய்தது இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் பட்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2RYN7Lr
via IFTTT
0 Comments
Thanks for reading