
இந்தியா வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதும். ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரும் ஒன்றா? என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் 18 ஆம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இங்கிலாந்தில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது ஒரு நல்ல விஷயம். இருந்தாலும் அது சரியான வழியில் செல்கிறதா என்பதை நான் சொல்ல முடியவில்லை. இது முதல் முறை. இந்தியா வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரும் ஒன்றா?
இரண்டையும் ஒரே அளவில் மதிப்பிட முடியுமா? அந்த கணக்கு எனக்கு புரியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ஆரோக்கியமான போட்டியை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் உருவாக்கி உள்ளது. இருந்தாலும் அந்த புள்ளிகள் விவரத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது” என பிராட் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ynTLM3
via IFTTT
0 Comments
Thanks for reading