
நடப்பு ஐபிஎல் சீசனின் பன்னிரெண்டாவது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயத்தில் தலா ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளன.
ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சனும். சென்னை அணிக்கு தோனியும் கேப்டன்களாக அணியை வழிநடத்த உள்ளனர். ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேராக விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் செம ஸ்ட்ராங்காக உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு அக்மார்க் ஸ்பின்னர் இல்லாதது சற்று பின்னடைவாக உள்ளது.
மும்பை மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்பதால் இரு அணியும் அதிக ரன்களை குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்வதும் இந்த ஆட்டத்தில் வெற்றியாளர்களை முடிவு செய்ய உதவும். இரண்டாவது இன்னிங்ஸின்போது மும்பையில் பனி பொழிவு அதிகம் இருக்கும். அது இரண்டாவதாக பேட் செய்கிற அணிக்கு சாதகம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3su0HD3
via IFTTT
0 Comments
Thanks for reading