PBKS vs SRH : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு!

நடப்பு ஐபிஎல் சீசனில் 14-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

பஞ்சாப் அணி இந்த சீசனில் முதல்முறையாக சென்னை மைதானத்தில் விளையாடுகிறது. மறுபக்கம் ஹைதராபாத் அணி இந்த சீசனில் சென்னை மைதானத்தில் நான்காவது போட்டியில் விளையாடுகிறது. பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. இரு அணிகளும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்த போட்டியில் விளையாடுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன்னர் விளையாடிய 16 போட்டிகளில் ஹைதராபாத் 11 வெற்றியும், பஞ்சாப் 5 வெற்றியையும் பதிவு செய்துள்ளது. 

பஞ்சாப் அணிக்கு பேட்டிங் படு ஸ்ட்ராங்காக உள்ளது. ராகுல், மயங்க், கெயில், ஷாருக் கான், தீபக் ஹூடா நல்ல பார்மில் உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3n8v9kR
via IFTTT

Post a Comment

0 Comments