
நடப்பு ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் கொல்கத்தா அணி முதலில் பேட் செய்கிறது.
இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 26 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி உள்ளன. டெல்லி 11 போட்டிகளிலும், கொல்கத்தா 14 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. நடப்பு சீசனில் டெல்லி அணி ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதே போல கொல்கத்தா அணி ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
Match 25. Delhi Capitals win the toss and elect to field https://t.co/GDR4bTRtlQ #DCvKKR #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
கொல்கத்தா அணி ஓப்பனிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதனால் ராகுல் திரிபாட்டி இன்று நித்திஷ் ராணாவுடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nvxc2R
via IFTTT
0 Comments
Thanks for reading