கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதியுதவி!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் விளையாடி வரும் எட்டு அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் அணியாக இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர். 

அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டும் இதற்கு உதவியுள்ளது. இந்த நிதியை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ உள்ளதாம். குறிப்பாக தற்போதைய நெருக்கடி சூழலை சமாளிக்கவும், ஆக்சிஜன் தேவையை சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் கம்மின்ஸ் முதன்முதலில் இந்தியாவுக்கு உதவ PM CARES நிதிக்கு நிதியுதவி அளித்திருந்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீயும் நிதி உதவி அளித்திருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Rc1JX7
via IFTTT

Post a Comment

0 Comments