மலேசியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை; சாய்னா நேவால் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கல்!

இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக பேட்மிண்டன் வரிசையில் முதல் 16 இடங்களில் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியா ஒபன் பேட்மிண்டன் தொடர் மே 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கை உறுதி செய்யலாம் என காத்திருந்தனர்.

image

சாய்னா தற்போது 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் தற்போது 20-வது இடத்திலும் உள்ளனர். கொரோனா காரணமாக, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இருவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gU8dFf
via IFTTT

Post a Comment

0 Comments