மைதானத்தை மிரள வைத்து கெத்து காட்டிய ஜடேஜா..! - புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணி வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றாலும் ‘தனி ஒருவனாக’ ஆல் ரவுண்டர் பர்பாமென்ஸை காட்டி கெத்து காட்டினார் ரவீந்திர ஜடேஜா. 

ஃபீல்டிங், பவுலிங் என பம்பரமாய் மைதானம் முழுவதும் சுழன்று மாஸ் காட்டினார். மைதானத்தில் எந்த பக்கம் பந்து சென்றாலும் அதை தடுப்பது ஜடேஜா என்பது போலவே ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அமைத்திருந்தது. அதன் விளைவாக 4 கேட்ச், 2 விக்கெட் என அணியின் வெற்றிக்கு ஆணி வேராக திகழ்ந்தார் ஜடேஜா. 

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் மனன் வோஹ்ராவை மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த ஜடேஜா லாவகமாக கேட்ச் பிடித்து வெளியேற்றி இருப்பார். தொடர்ந்து ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் பந்து வீச தொடங்கிய ஜடேஜா தனது முதல் ஓவரில் 11 ரன்களை விட்டுக் கொடுத்திருப்பார். அடுத்த ஓவரிலும் 11 ரன்கள். பட்லர் ஜடேஜாவின் பந்தை பந்தாடி இருப்பார். இந்நிலையில் தான் பன்னிரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பட்லரை கிளீன் போல்ட் செய்திருப்பார். தொடர்ந்து அதே ஓவரில் தூபேவை LBW முறையில் வீழ்த்தினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த ஓவர் ஆட்டத்தை முழுவதுமாக சென்னையின் பக்கம் திருப்பி இருந்தது. அதற்கடுத்த ஓவரிலும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

மொயின் அலி வீசிய பதினைந்தாவது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற படி ரியான் பராக் மற்றும் கிறிஸ் மோரிஸ் கொடுத்த கேட்ச்களை பிடித்து அசத்தியிருப்பார். தொடந்து கடைசி ஓவரில் டீப் பேக்வார்ட் பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா உனத்கட் கொடுத்த கேட்ச்சையும் பிடித்திருப்பார். அதோடு இந்த போட்டியில் ‘நான் நாலு கேட்ச் பிடித்துள்ளேன்’ என்பதையும் சிம்பாளிக்காக சொல்லி கொண்டாடினார் ஜடேஜா. மேலும் ஃபீல்டராக ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பவுண்டறிக்கு விரட்டிய பந்துகளையும் தடுத்து அசத்தினார் அவர். 

அதனை ரசிகர்களும், நெட்டிசன்களும் இணையத்தில் கொண்டாடி தீர்த்துள்ளனர்.. 

 

சென்னை அணியின் எல்லை கோட்டு சாமியாக கலக்குங்க ஜடேஜா. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3n4VTmE
via IFTTT

Post a Comment

0 Comments