
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது அந்த அணி. இதற்கு முன்னதாக விளையாடி இருந்த மூன்று போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்காக கேப்டன் டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். வார்னர் 37 பந்துகளில் 37 ரன்களை குவித்து பபியான் ஆலேன் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Here it is! The much needed breakthrough for #PBKS. Warner departs for 37.
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
And that's a wicket maiden from Fabian Allen.
Live - https://t.co/THdvFfevMJ #PBKSvSRH #VIVOIPL pic.twitter.com/yiMRb2eebA
தொடர்ந்து மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வில்லியம்சன், பேர்ஸ்டோ ரன் சேர்க்க உதவினார். அதன் மூலம் பேர்ஸ்டோ அரை சதம் கடந்தார்.
That's that from Match 14 as @SunRisers win by 9 wickets to register their first win in #VIVOIPL 2021.
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
Scorecard - https://t.co/gUuead0Gbx #PBKSvSRH pic.twitter.com/d91pWM2OHR
முடிவில் 18.4 ஓவரில் வெற்றி இலக்கை கடந்தது ஹைதராபாத். இந்த வெற்றி ஐபிஎல் அரங்கில் ஹைதராபாத் சென்னை மைதானத்தில் பெற்ற முதல் வெற்றியாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QOiqIk
via IFTTT
0 Comments
Thanks for reading