ஹாட்ரிக் வெற்றி பெறுமா சி.எஸ்.கே? டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு

நடப்பு ஐபிஎல் சீசனின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கொல்கத்தா அணிக்கு மும்பை மைதானத்தில் இந்த சீசனில் இது முதல் போட்டியாகும். 

சென்னை அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் செம ஸ்ட்ராங்காக உள்ளது. மறுபக்கம் கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்கின்றனர். இருப்பினும் பின் வரிசையில் சொதப்புவது தோல்விக்கு காரணமாக அமைகிறது. அதை அந்த அணி சரி செய்ய வேண்டி உள்ளது. 

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 22 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் சென்னை 14 போட்டிகளிலும், கொல்கத்தா 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tGxIx7
via IFTTT

Post a Comment

0 Comments