ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப் போட்டி பிரிவில் தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒலிம்பிக்கில் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் நேத்ரா குமணன்.
வரும் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க தான் தமிழகத்தை சேர்ந்த இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
Conquering the ocean waters!!⛵️?
— Team India (@WeAreTeamIndia) April 8, 2021
Indian sailors to set historic sail for @Tokyo2020? as Vishnu Saravanan secures qualification in Laser STD Class, while Ganapathy Kelapanda Chengappa and Varun Thakkar make it in the 49er Class!
Congratulations sailors?#WeAreTeamIndia?? pic.twitter.com/QayTRjJxz8
விஷ்ணு Laser STD பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்திய பாய்மர படகுப் போட்டி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் நேத்ரா படைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3s1Yazy
via IFTTT
0 Comments
Thanks for reading