கோவளத்தில் மும்பை இந்தியன்ஸ், மெரினாவில் ஆர்சிபி... 100 கமென்டேட்டர்களோடு தொடங்குகிறது #IPL2021

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 2021 ஐபிஎல் திருவிழா தொடங்கயிருக்கிறது. இரண்டு மாத காலம் நடைபெற இருக்கும் இந்த கிரிக்கெட் கொண்டாட்டம் கொரோனாவால் பலவிதமான கட்டுப்பாடுகளோடு நடக்கயிருக்கிறது.

நாளை மாலை மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது ஐபிஎல். கேரவன் க்ளஸ்டர் மாடலில் இந்தமுறை போட்டிகள் நடைபெறுவதால் யாருக்கும் ஹோம் கிரவுண்ட் போட்டிகள் இல்லை. எல்லாமே நியூட்ரல் மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

இதனால் தற்போது சென்னையில் நான்கு அணிகள் முகாமிட்டிருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்ஸ்மேன் கோவ் ஹோட்டலில் தங்கியிருக்கிறது. பெங்களூரு அணி மெரினாவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறது. ஹைதரபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் தற்போது சென்னையில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இந்தமுறை 100 கமென்டேட்டர்களோடு களமிறங்குகிறது ஸ்டார். இதில் ஆங்கில சேனலுக்கு மட்டும் 21 கமென்ட்டேட்டர்கள். சுனில் கவாஸ்கர், இயான் பிஷப், சைமன் டவுல், மேத்யூ ஹேடன், கெவின் பீட்டர்சன், டேனி மாரிசன், மார்க் நிக்கோலஸ் எனப் பல முக்கிய கமென்ட்டேட்டர்கள் இடம்பெற்றிருக்கும் இந்த அணியில், அஞ்சும் சோப்ரா, லிசா, மெல் ஜோன்ஸ் என மூன்று பெண் வர்ணணையாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனலின் டக் அவுட் (Dug Out) கமென்ட்ரி பாக்ஸில் பிரையன் லாரா, பிரெட் லீ, ஸ்காட் ஸ்டைரிஸ், கிராம் ஸ்வான், டொமினிக் கார்க் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நாசர் உசேன், ராஸ் டெய்லர், ஷேன் வாட்சன் ஆகியோரும் டக் அவுட் கலந்துரையாடல்களில் இடம்பெற இருக்கிறார்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, மராத்தி என 7 இந்திய மொழிகளிலும் போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸின் ஸ்ட்ரைக் பெளலருமான ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசனும் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கயிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளைத் தொகுத்து வழங்கிவந்த மயாந்தி லாங்கர் இந்தாண்டு இடம்பெறவில்லை. கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னியின் மனைவியான மயாந்திக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. அதனால் அவர் தற்போது பிரேக்கில் இருக்கிறார்.



from விகடன் https://ift.tt/3206pSa
via IFTTT

Post a Comment

0 Comments