
நடப்பு ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 154 ரன்களை 6 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது.
நித்திஷ் ராணா மற்றும் ஷூப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை அணுகினர். அக்சர் பட்டேல் வீசிய நான்காவது ஓவரில் கிரீசை விட்டு வெளியில் இறங்கி வந்து ஆட முயன்ற ராணா, அந்த பந்தை மிஸ் செய்ய, பண்ட் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். தொடர்ந்து வந்த ராகுல் திரிப்பாட்டியும் ரன் குவிக்க தடுமாறி 19 ரன்களை எடுத்து தவறான ஷாட் ஆடி வெளியேறினார்.
1⃣ wicket for @DelhiCapitals in the powerplay ?
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
At the end of 6 overs, @KKRiders are 45/1
Follow the game ? https://t.co/iEiKUVOcN8#VIVOIPL #DCvKKR pic.twitter.com/LgLUPtHO5N
Both @LalitYadav03 and @DelhiCapitals are on a roll!
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
Two wickets in his 3rd over to go with the catch of Rahul Tripathi, Lalit has turned this around. Morgan & Narine return without scoring as #KKR slip to 75-4.https://t.co/iEiKUVwBoy #DCvKKR #VIVOIPL pic.twitter.com/7EC12S9ORM
லலித் யாதவ் வீசிய 11வது ஓவரில் மோர்கன் மற்றும் நரைன் டக் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து செட் பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டிருந்த கில்லும் 38 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆவேஷ் கான் வேகத்தில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக்கும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அவரை அக்சர் வெளியேற்றி இருந்தார்.
நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் கொல்கத்தா அணி தடுமாறியது. இருப்பினும் ரசல் அந்த அணிக்கு ஆறுதல் கொடுத்தார். 27 பந்துகளில் 45 ரன்களை குவித்தார் அவர்.
6000 runs for @Russell12A
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
On his 33rd birthday, he completes 6k T20 runs. Hopes of #KKR fans are once again pinned on him!https://t.co/iEiKUVwBoy #DCvKKR #VIVOIPL pic.twitter.com/pjWQRNMwb0
டெல்லி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 155 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32WzJtk
via IFTTT
0 Comments
Thanks for reading