Mbappé: "எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்!"- எம்பாப்பே கொடுத்த அப்டேட்

PSG அணியிலிருந்து விலகிய எம்பாப்பே, அடுத்து இணையப் போகும் அணி குறித்துப் பேசியிருக்கிறார்.

25 வயதான பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வே PSG (பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன்) அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணிக்காக இதுவரை 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்திருக்கிறார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்களைப் பதிவு செய்திருந்தார். கிலியான் எம்பாப்பே

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு PSG அணியிலிருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து PSG அணியிலிருந்து விலகும் எம்பாப்பே பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட்டில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. Mbappé: "ஒரு அணியுடன் நீண்டகாலமாக இருந்துவிட்டு வெளியேறுவது என்பது..." - PSG அணி குறித்து எம்பாப்பே

இதனிடையே பிரான்சில் லீக் 1 விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆண்டின் சிறந்த வீரர் விருதை எம்பாப்பே வென்றார். அந்நிகழ்வில் பேசிய எம்பாப்பே, "எனது அடுத்த கிளப் பற்றி அறிவிக்க இது சரியான நேரம் அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது. எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.கிலியான் எம்பாப்பே

லீக்-1 சீசனிலிருந்து வெளியேறும்போது நான் சரித்திரம் படைத்திருக்க வேண்டும் என்று எனது அப்பா விரும்பினார். இந்த நீண்டநாள் பயணத்தில் அதை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T6sFrF

Post a Comment

0 Comments