நடப்பு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி இதுவரைக்கும் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளக் குஜராத்துக்கு எதிராக இன்று இரவு நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருத்துராஜ் கையில் ஒப்படைத்த தோனி வெறும் விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலேயே நம்பர் 9 பேட்டிங் வரிசையில்தான் களமிறங்கினார்.தோனி, ருத்துராஜ்
இதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அப்போட்டியில் கோல்டன் டக் அவுட்டான தோனி 9வது இடத்தில் களமிறங்குவதற்குப் பதிலாக பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று இர்பான் பதான், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இதன்பின் சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில், தோனியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் காயத்தால்தான் தோனி கடைசி நேரத்தில் விளையாடுவதாகப் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் தெரிவித்துள்ளார்.Dhoni: உடலை வருத்தும் காயத்தோடு தோனி யாருக்காக ஆடுகிறார்?
இது குறித்துப் பேசிய அவர், "அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் பெரிதாக விளையாட முடியாது. அதனால் நாங்கள் அவருடைய பணிச்சுமையைக் குறைக்க நினைக்கிறோம். எனவே கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் பேட்டிங் செய்வதை நாங்கள் விரும்புகிறோம்.தோனி, ஸ்டீபன் ப்ளெம்மிங்
பேட்டிங், கீப்பிங் ஆகியவற்றுடன் அவர் புதிய கேப்டனுடன் தனது ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்வார். நாங்கள் கடைசி நேரத்தில் களமிறக்கி அவரைப் பாதுகாக்க விரும்புகிறோம். எங்களுக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை” என்று விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
பிளெம்மிங் சொல்வது குறித்த உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.
http://dlvr.it/T6hRpW
0 Comments
Thanks for reading