வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸில் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலே சதம் விளாசிய அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.Yashasvi Jaiswal
இந்நிலையில் போட்டிக்குப் பிறகு, சதம் அடித்தது குறித்து சில விஷயங்களை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பகிர்ந்திருக்கிறார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைப்பது கடினம். ஆகையால் என்னுடைய ஆதரவாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்.
கடினமான சூழல்களைச் சவால் நிறைந்துள்ள சூழல்களை எதிர்கொள்வதும் பிடிக்கும். இந்த இடத்திற்கு வருவதற்கு நான் கடினமாக உழைத்திருக்கிறேன். இது ஆரம்பம்தான். நான் இன்னும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/Ss8zpR

0 Comments
Thanks for reading