TNPL 2023: `இரண்டெல்லாம் எங்களுக்குப் போதாது. 2025 வரைக்கும் நாங்கதான்!' - சூளுரைத்த ஷாருக்கான்!

பரபரப்பாக நடைபெற்று வந்த TNPL தொடர் முடிந்திருக்கிறது. திருநெல்வேலியில் நடந்த இறுதிப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.TNPL 2023 கடந்த சீசனிலும் லைகா கோவை கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. ஆனால், அதில் ஒரு குட்டி ட்விஸ்ட். அந்த இறுதிப்போட்டியில் மழை புகுந்து ஆடியதால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை பகிர்ந்துக்கொண்டது. ஆக, தனிப்பட்ட முறையில் முதல் முறையாக கோப்பையை வென்றிருப்பதால் இந்த சீசன் லைகா அணிக்குக் கொஞ்சம் ஸ்பெஷலானதுதான். TNPL 2023 ஓர் அணியாக முழுமையாக செயல்பட்டதுதான் லைகா கோவை கிங்ஸ் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தாலும் அதைத்தாண்டியும் ஒரு வீரர் கோவையின் வெற்றிகளுக்கு பிரதான காரணமாக இருந்தார். அவர் ஷாருக்கான். அணியின் கேப்டனாக ஒரு ஆல்ரவுண்டராக முழுமையாக தன்னுடைய பங்களிப்பை அளித்திருந்தார். TNPL தொடரில் இந்த முறைதான் ஏலத்தில் வீரர்களை வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரைக்கும் ஒரு விஷயம் எப்போதுமே அழுத்தமாகக் கூறப்படும். அது, ஒரு அணியின் வெற்றி தோல்வி என்பது களத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அது, ஏல மேசையிலேயே பாதி தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்பார்கள். ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தங்களுக்குத் தேவையான பாக்ஸ்களை டிக் அடிக்குமாறு சரியான வீரர்களைத் தேர்வு செய்யும் அணி தொடரில் முக்கிய போட்டியாளராகச் சவாலளிப்பதை ஐ.பி.எல் லிலேயே பார்த்திருப்போம். அதே விஷயம்தான் இங்கும். முதல் முறையாக கோவை அணி ஏலத்தை எதிர்கொள்கிறது. ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு மொத்தமும் ஷாருக்கானின் கையில்தான் இருந்தது. அவரே உட்காந்து தனக்கும் அணிக்கும் தேவையான வீரர்களை தெரிவு செய்து சரியான வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தார்.ஏலத்திற்குச் செல்லும் போது கோவை அணியின் கையில் இருந்தது 6250000 ரூபாய் மட்டும்தான். இதில் சாய் சுதர்சனை அணியில் எடுப்பதற்கு மட்டுமே 21.6 லட்சத்தை கோவை அணி செலவளித்திருந்தது. சாய் சுதர்சனின் ஐ.பி.எல் மதிப்பே 20 லட்சம்தான்.TNPL 2023 அப்படியிருக்கையில் அவருக்கு இவ்வளவு தொகை கொடுத்து அணிக்குள் கொண்டு வந்தது பெரிய ரிஸ்க்காக பார்க்கப்பட்டாலும், ஒரு மேட்ச் வின்னரை அணிக்குள் கொண்டு வந்த திருப்தி ஷாருக்கானுக்கு இருந்தது. எதிர்பார்த்ததை போலவே சாய் சுதர்சனும் ஐ.பி.எல்-இல் வெளுத்து வாங்கிவிட்டு அதே ஃபார்மோடு TNPLக்கு வந்து சேர்ந்தார். கோவைக்கு வெற்றி மேல் வெற்றியாக அறுவடை செய்து கொடுத்தார். சாய் சுதர்சன் ஆடிய 6 போட்டிகளில் 4 அரைசதங்களை அடித்துக் கொடுத்தார். 371 ரன்களை 172 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தியிருந்தார். வேறு தொடர்களில் ஆட வேண்டியிருந்ததால் ப்ளே ஆப்ஸூக்கு முன்பாக சாய் சுதர்சன் வெளியே கிளம்பிவிட்டார். சாய் சுதர்சன் இல்லாத போதும் சச்சின் என்கிற இளம் வீரரை வைத்து சாய் சுதர்சனின் இடத்தை நிரப்பி வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் ஷாருக்கான். TNPL 2023 ஷாருக்கான் பேட்டராக பெரியளவில் ரன்கள் எடுக்கவில்லையென்றாலும் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் கிடைத்த வாய்ப்பில் சில மிரட்டலான இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தார். பேட்டர் என்பதை விட பௌலராக ஷாருக்கான் இந்த சீசனில் பயங்கரமாக கலக்கியிருக்கிறார். இந்த சீசனில் ஆடிய 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எக்கானமிதான் இன்னும் ஆச்சர்யமளிக்கிறது. ஷாருக்கானின் எக்கானமி வெறும் 6.66 மட்டும்தான். இறுதிப்போட்டியிலுமே ஷாருக்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த 3 விக்கெட்டில் 2 விக்கெட்டுகள் ரொம்பவே முக்கியமானது. அருண் கார்த்திக் மற்றும் நிதிஷ் ராஜகோபால் என ஷாருக் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள்தான் போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. ஐ.பி.எல்-இல் கூட ஷாருக்கான் பெரிதாகப் பந்துவீசியதில்லை. சில காலம் முன்பு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசுவதைத் தவிர்த்து வந்தார். இப்போது அதெல்லாம் சரியாகிவிட்டதால் ஆஃப் ஸ்பின்னராக பல போட்டிகளில் முழுமையாக 4 ஓவர்களையும் கூட வீசியிருந்தார். வெறுமென ஹார்ட் ஹிட்டராக ஃபினிஷராக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஷாருக், பந்துவீச்சில் காட்டியிருக்கும் விஸ்வரூபம் அவரின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. ஒரு கேப்டனாகவும் முழுமையான மனத்திடத்தோடு எப்போதுமே ஒரு பாசிட்டிவ்வான மனநிலையோடு சுற்றி வந்தார் ஷாருக். கிட்டத்தட்ட ஐ.பி.எல் இல் ஹர்திக் பாண்டியா என்ன மாதிரியான மனநிலையோடு கேப்டன்சி செய்வாரோ அதே மாதிரிதான் ஷாருக்கானும் கேப்டன்சியை அணுகினார். 'வெற்றி தோல்வியை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. இந்த அணி இந்த ஒரு சீசனுக்காக கட்டமைக்கப்பட்ட அணி இல்லை. 2025 சீசன் வரைக்கும் மனதில் வைத்துதான் அணியை எடுத்திருக்கிறோம். 2025 வரைக்கும் நாங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.TNPL 2023 வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் 'இந்த முறை வென்றதெல்லாம் போதாது. 2025 வரை நாங்கள் வென்றுகொண்டே இருக்க வேண்டும்.' என்கிறார் ஷாருக். இப்படியே ஆடினால் ஷாருக்கின் கனவு நிஜமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வாழ்த்துகள் ஷாருக் & கோ!
http://dlvr.it/SsCZNK

Post a Comment

0 Comments