Sunil Chhetri: "ரொனால்டோ, மெஸ்ஸியை விட நான் சிறந்தவன்!"- சுனில் சேத்ரி சொல்வதென்ன?

கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டிற்கான தெற்காசிய சாம்பியன்ஷிப் கோப்பையை குவைத் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றது. இதற்கு இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். 38 வயதான சுனில் சேத்ரி பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காகப் பங்காற்றி வருகிறார். அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்திலும், லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், அலி தேயி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.Champions இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான தெற்காசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது குறித்தும், வரவிருக்கும் ஆசிய கோப்பை குறித்தும் சுனில் சேத்ரி பேசியிருக்கிறார்.  “முதல்நாள் போட்டியிலிருந்தே ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. அவர்கள் எங்களை ஊக்குவித்த விதம் மாயாஜாலமான ஒன்று. குவைத் மற்றும் லெபனான் இரண்டுமே தரமான  அணிகள். அந்த அணிகளைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றது மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் கால்பந்து ரசிகர்களின் அணுகுமுறை மற்றும் விழிப்புணர்வில் ஒரு நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கால்பந்தைப் பற்றிப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாற்றங்களை என்னால் உணர முடிகிறது. அதே சமயம் இந்திய கால்பந்து அணியின் தரத்தையும் உயர்த்தியுள்ளோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். சுனில் சேத்ரி | Sunil Chhetri இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஆசிய கோப்பைப் பற்றிப் பேசிய அவர், “ஆசியக் கோப்பை எங்களுக்கு உலகக் கோப்பை போன்றது. எங்கள் சிறந்த ஆட்டத்தை அதில் வெளிப்படுத்துவது என்பது மிக முக்கியமானது. ஆனால் அந்த அழுத்தத்தை வீரர்கள் மீது செலுத்த நான் விரும்பவில்லை. ஒவ்வொரு முறையும் ஆசிய கோப்பைக்குத் தகுதி பெறுகிறோம். நிச்சயம் இந்த முறை கோப்பையை வெல்வோம். நான் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் ரசிகன். ஆனால், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் அவர்களை விட சிறந்தவனாக இருக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.     
http://dlvr.it/Ss1znB

Post a Comment

0 Comments