Rishi Sunak: சேப்பாக்கம் நினைவுகள்; சச்சினின் பேட்டிங்கைப் புகழ்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் போல கிரிக்கெட் மீது உங்களுக்கும் ஆர்வம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் ஒரு தீவிர விளையாட்டு ரசிகன். எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். அவரது அணுகுமுறையும் ஆளுமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.ரிஷி சுனக் இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி பார்த்த நினைவுகளையும் ரிஷி சுனக் பகிர்ந்திருக்கிறார்.  “2008-ம் ஆண்டு நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக நான் இந்தியா சென்றபோதுதான் தீவிரவாத தாக்குதல் நடந்தது.  அப்போது இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த இங்கிலாந்து அணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு திரும்பி விட்டது. பிறகு இந்தியாவிற்கு மீண்டும் சென்று சென்னையில் டெஸ்ட் போட்டி விளையாடினார்கள். ரிஷி சுனக் அந்தப் போட்டியை நான் நேரில் சென்று பார்த்தேன். அப்போது சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். சச்சின் பேட்டிங் செய்த விதம், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று   இங்கிலாந்து அணி தோல்வியுற்றது“ என்று பகிர்ந்திருக்கிறார்.
http://dlvr.it/Srf0PH

Post a Comment

0 Comments