இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் (32).
2016-ம் ஆண்டு இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டவர், இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 121 விக்கெட்டுகளும், 75 டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சஹால், 145 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சஹால்
2014 முதல் எட்டு ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வந்த இவரை, 2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 2022ம் அண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு 27 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் எடுத்த வீரராக பர்பிள் தொப்பியை வென்றிருந்தார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் அணி தன்னைத் தேர்வு செய்யாதது பற்றி மனம் திறந்து பேசியுள்ள யுஸ்வேந்திர சஹால், "என் கிரிக்கெட் பயணத்தை பெங்களூர் அணியிலிருந்துதான் தொடங்கினேன். சுமார் எட்டு ஆண்டுகள் ஒரே குடும்பமாகப் பயணித்திருக்கிறோம். முதல் போட்டியிலிருந்தே, விராட் பாய் என் மீது நம்பிக்கை அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.யுஸ்வேந்திர சஹால், விராட் கோலி
பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடியதால்தான் நான் இந்திய அணிக்கே தேர்வானேன். ஆனால் பெங்களூர் அணி என்னை ஏலத்தில் எடுக்காததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
அதனால், ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆரம்பித்த முதல் போட்டியில் பெங்களூர் அணியின் பயிற்சியாளர்கள் உட்பட யாரிடமும் நான் 2-3 நாள்களாகப் பேசாமலேயிருந்தேன். உண்மையில், பெங்களூர் அணி என்னைத் தேர்வு செய்யாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது" என்று பேசியுள்ளார்.
மேலும், பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல்'லில் கோப்பையை வெல்லாதது குறித்துப் பேசிய சஹால், "விராட் கேப்டனாக இருந்தபோது கோப்பையை வெல்லாதது குறித்து அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன. ஆனால், இப்போது டு ப்ளெஸ்ஸி கேப்டனாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லை. உண்மையில் இதற்கான காரணம் என்னவென்றே இதுவரை தெரிவில்லை" என்று கூறினார்.யுஸ்வேந்திர சஹால், தோனி
தோனி குறித்துப் பேசிய சஹால், "இந்திய அணியில் தோனியுடன் விளையாடிய போது, அவர் எனக்குக் கொடுத்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பி செயல்படுத்துவேன். மஹி பாய், என்ன கேள்வி கேட்டாலும் உட்கார்ந்து அவருக்குப் பதில் சொல்வேன். இல்லையேல் அவர் முன்னாடி நான் அமைதியாக நிற்பேன்" என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/SsJzdg

0 Comments
Thanks for reading