கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் ‘A’ அணிகளுக்கு சிறந்த பயிற்சியாளராகத் திகழ்ந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய சீனியர் அணிக்கு பயிற்சியாளராக கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் குறித்து பேசாமல்அவர் நடித்த விளம்பரம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.ராகுல் டிராவிட்
2021 ஆம் ஆண்டு கிரெட் ( cred) இணையதளத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்த ராகுல் டிராவிட் இந்திரா நகரின் ரவுடி நான் என்று கூறி பேட்டால் வாகனங்களின் கண்ணாடியை உடைத்திருப்பார். தற்போது அதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “ இந்த விளம்பரத்தை பார்த்ததிலிருந்து பலரும் என்னை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நான் எப்போது கோபப்பட்டு அதை போல் வெடிப்பேன் என்று அனைவரும் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.
அந்த விளம்பரத்தில் நடித்தது நன்றாக இருந்தது. அந்த விளம்பரத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் என் அம்மாவுக்கு நான் அந்த விளம்பரத்தில் நடித்தது பிடிக்கவில்லை. நான் கண்ணாடியை அடித்து உடைப்பது போல் நடித்ததற்கு ‘நீயா அப்படி செஞ்ச’ என்று என்னிடம் அம்மா கேட்டார். ராகுல் டிராவிட்
அந்த மாதிரி கண்ணாடியை உடைத்திருக்கக் கூடாது என்று இன்று வரை அவர் நினைக்கிறார். என்று பகிர்ந்த அவர் முதல் முதலாக நடிக்கும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. விளம்பரத்திற்காக மும்பையின் நடுதெருவில் நான் கத்திக் கொண்டு இருந்தேன். என்னைச் சுற்றி துணை நடிகர்கள் இருந்தபோதும் மக்கள் முன் நடுரோட்டில் அப்படி நின்று கத்தி கொண்டு இருந்தது ஒருவிதத் தயக்கமாகத்தான் இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/Ss3STC
0 Comments
Thanks for reading