Neymar: ரூ.28 கோடி அபராதம்; நெய்மரின் செயலால் கோபப்பட்ட பிரேசில் அரசு!

பிரேசிலின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் நெய்மர். இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில், தெற்கு ரியோ டி  ஜெனிரோவில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி ஒன்றை அமைத்திருக்கிறார் நெய்மர். இந்த ஏரியை அமைக்கும் பணியின்போது சுற்றுசூழல் விதிகளை மீறியிருக்கிறார். அதாவது, செயற்கை ஏரி அமைப்பதற்கு பிரேசில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறாதது, பின் நதிநீரை மடைமாற்றி திருப்பி விட்டது; தரைப்பகுதியை வெட்டியது என பல்வேறு விதி மீறல்களில் நெய்மர்  ஈடுபட்டிருக்கிறார். நெய்மர் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியாக அந்தப் பகுதியில் மேற்கொண்ட  கட்டுமான பணிகளுக்கு அரசு தடையை விதித்துள்ளது. ஆனால் நெய்மர் அந்த ஏரியில் பார்ட்டி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்தப் பகுதியில் அமைந்துள்ள மங்கராதிபா என்ற  சுற்றுசூழல் அமைப்பு விசாரித்து 3.3 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்திய மதிப்புப்படி 28.6 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதம் தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட 20 நாட்கள் அவகாசம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
http://dlvr.it/Srhk5M

Post a Comment

0 Comments