நடந்து முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார் அஜிதேஷ் எனும் இளம் வீரர்.ajidesh
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 வயதே ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஜிதேஷை ரீட்டெயின் செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், அணி அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டியது . இந்த வருட TNPL தொடரில் 10 போட்டிகளில் 64.17 ஆவரேஜ் மற்றும் 163.14 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 385 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்று அணி தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். லைகா கோவை கிங்க்ஸ்க்கு எதிரான போட்டியில் நெல்லை பேட்ஸ்மேன்கள் யாரும் ஒத்துழைக்காத போதும் தனி ஆளாக நின்று 112 ரன்கள் அடித்து 182 இலக்கை எட்டி அவர் வெற்றிபெறவைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த இன்னிங்ஸ் ஏழு வருட TNPL வரலாற்றில் ஒரு தலைசிறந்த இன்னிங்ஸ் ஆகும். அஜிதேஷ்
பெங்களூரில் பிறந்து வளர்ந்த அஜிதேஷ் ஆறு வயது முதலே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தீவர கிரிக்கெட் ரசிகரான இவரது தந்தை ஞானகுருசாமி இவரை கர்நாடகா கிரிக்கெட் இன்ஸ்டிடியூட்டில் (KIOC) ஏழு வயதில் சேர்த்து விடுகிறார். கர்நாடக U-14 அணிக்கு தேர்வாகி விளையாடியவருக்கு U-16 அணியில் வாய்ப்பு கிடைக்காததால், இந்த நிராகரிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தவரை இவரது தந்தை எங்கு போட்டி நடந்தாலும் சென்று விளையாட ஊக்குவிக்கிறார். அதன் பிறகு தமிழ்நாட்டு வீரர் சுனில் சாம் இவரை அடையாளங்கண்டு தமிழ்நாட்டில் நடக்கும் போட்டிகளில் விளையாட உந்துகிறார். அப்படியே கோயம்புத்தூருக்கு குடிபெயர ராமகிருஷ்ணா கலை & அறிவியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து நெல்லை அணியின் பயிற்சியாளர் AG குருசாமியின கீழ் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறனை மெருகேற்றி மேம்படுத்திக் கொள்கிறார்.
அவருக்கு 2022 TNPL தொடரில் நெல்லை அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த சீசனில் பெரும்பாலும் லோயர் மிடில் ஆர்டரில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 6 போட்டிகளில் 243 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 129 ரன்கள் குவித்துள்ளார். இதனால் சையத் முஸ்தக் அலி தொடருக்கு தமிழ்நாடு அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் விளையாடிய ஐந்து போட்டியில் சத்தீஸ்கர் அணியுடன் மட்டும் நன்றாக விளையாடுகிறார். அதன்பின் பயிற்சியில் தனது ஆட்ட நுணுக்கத்தையும் ஸ்பின் பௌலிங்கில் ஆடுவதையும் மெருகேற்றிக் கொள்கிறார்.இதற்கடுத்து தான் இந்த TNPLல் மூன்று அரைசதம் ஒரு சதத்துடன் அதிக ரன்கள் அடித்த சம்பவம் நடந்தது. திண்டுக்கல்லுக்கு எதிரான போட்டியில் ரித்திக் ஈஸ்வரனோடு சேர்ந்து 22 பந்துகளில் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்போடு நெல்லை அணியை வெற்றிபெற செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Younger and newer players who could be blooded into the TN setup at the earliest and hopefully some go on to play IPL
Ajitesh- best TNPL batter
Adnan Khan
Ritik eswaran
Jhatvedh
Aditya Ganesh
Nidish rajagopal
Bhuvaneswaran
Sunny Sandhu
Shivam Singh
Subodh bhati
Gurjapneet— DK (@DineshKarthik) July 15, 2023
கடந்த சீசனில் லோயர் மிடில் ஆர்டரிலும் இந்த சீசன் தொடக்கத்தில் அப்பர் மிடில் ஆர்டரிலும் ஆடிய அஜிதேஷ் பிற்பகுதியில் நிதிஷ் ராஜகோபால் காயம் காரணமாக வெளியேற மூன்றாம் இடத்திலும் சிறப்பாக விளையாடியுள்ளார். தன் அணிக்கு தேவைப்படும் இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனாக தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளார். லிவிங்ஸ்டன், டிம் டேவிட் போன்றவர்களைப் போல க்ளீன் ஹிட்டரான அஜிதேஷ் இந்த சீசனில் மட்டும் 21 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த TNPLல் ஸ்பின், வேகப்பந்து இரண்டையும் நன்றாகவே விளையாடியவர், ஆப்-ஸைடு, லெக்-ஸைடு இருபுறமும் பந்தை பறக்கவிடுகிறார். மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போன்ற அணிகளின் ட்ரெயில்ஸில் பங்குபெற்றுள்ளது மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேம்பிலும் அங்கம் வகிக்கிறார். கடந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியாலும் அஜிதேஷ் வாங்கப்படவில்லை. ஆனால், இனியும் அஜிதேஷை ஓரங்கட்ட முடியாது.
http://dlvr.it/SsGDC5

0 Comments
Thanks for reading