Indian Football: மகுடம் சூடிய நீலப்புலிகள்; பெனால்டி ஷூட் அவுட்டில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய கால்பந்து வரலாற்றில்  9வது முறையாக தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்று புதிய அத்தியாத்தை எழுதியுள்ளது நீலப்புலிகள் என்று அழைக்கப்படும் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் குவைத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்று பட்டத்தை வென்றிருக்கிறது இந்தியா.India இந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக எதிரணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத அளவுக்கு அசுர பலத்துடன் வலம் வந்தது இந்திய அணி. குவைத் அணியை பொறுத்தவரை தொடர் முழுவதும் சிறப்பாகவே ஆட்டத்தை விளையாண்டனர். குவைத் அணி, முதன் முறையாக இத்தொடரில் களமிறங்கினாலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. இந்த தொடரில் 9 போட்டிகளில் 8ல் வென்று கடும் சவாலை கொடுக்கும் அணியாகத் திகழ்ந்தது குவைத்.நேற்றைய இறுதிப்போட்டியில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குவைத் அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில் குவைத் அணி முதல் கோலை அடித்து முன்னிலைப் பெற்றது. சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்தியா, முதல் பாதியிலேயே எதிர்வினையை காட்டியது. சுனில் சேத்ரியின் பாஸ் பெனால்டி ஏரியாவுக்கு பந்து சென்றது. அதை குருனியன் அருமையான அசிஸ்ட் கொடுக்க கோலாக மாற்றினார் சாங்தே. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1 கோல் அடித்தனர். இரண்டாவது பாதியில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சிகளுமே தோல்வியிலேயே முடிந்தது. அடுத்த கூடுதல் நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட்க்கு ஆட்டம் நகர்ந்தது.பெனால்டி  ஷூட்டில் முதல் ஷாட்டை கோலாக அடித்தார் சுனில் சேத்ரி. குவைத் அணி முதல் ஷாட்டை தவறவிட்டாலும் தொடர்ச்சியாக நான்கு கோல் அடிக்க 4-4 என்ற கோல்களில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஷாட்டை மகேஷ் சிங் கோல் அடிக்க 5-4 என்ற நிலையில் இந்திய  முன்னிலைப் பெற்றது.India இப்போது பெரும் நம்பிக்கையுடன் அனைவரின் பார்வையும் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் மீது விழுந்தது. கடைசி ஷாட்டை அடிக்க வந்தார் குவைத் அணியின் கேப்டன் ஹாஜியா . கோல் போஸ்டின் இடது பக்கமாக சென்ற பந்தை  பயந்து தடுத்தார் குர்பிரீத் சிங். இறுதியில் மைதானத்தில் ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்க ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் கட்டியணைத்து வெற்றியைக் கொண்டனர். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ஒரு தோல்வியைக் கூட சுவைக்காத இந்தியா 9வது முறையாக தெற்காசிய பட்டத்தை வென்று கோப்பையை முத்தமிட்டது.  இந்த தொடரில் 23 கோல்கள் அடித்து அதிரடியாக விளையாடிய சுனில் சேத்ரி கோல்டன் பூட் மற்றும் கோல்டன் பால் விருதைப் பெற்றார். முத்தரப்புக் கோப்பை, இன்டர்கான்டினென்டல் கோப்பை, தெற்காசிய சாம்பியன்ஷிப் என இந்த ஆண்டில் தொடர்ச்சியாக பட்டங்களை வென்று சாம்பியன்களாக முன்னேறிக் கொண்டே இருக்கிறது இந்திய அணி. 
http://dlvr.it/Srk2JH

Post a Comment

0 Comments