சென்னையில் Parimatch ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் பிராண்ட் அம்பாசிடரான தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
அஷ்வின் குறித்து பேசிய அவர், “அஷ்வினுக்கு இருக்கும் திறமைக்கும் அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கும் அவர் இந்திய அணியின் கேப்டனாக முழு தகுதியுடையவர். வரவிருக்கிற ஆசியக் கோப்பைத் தொடரில் இரண்டாம் கட்ட இந்திய அணி ஆடும்பட்சத்தில் அதற்காவது அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். அஷ்வின் |Ashwin
"சென்னை சேப்பாக்கத்தில்தான் உலகக்கோப்பையின் முதல் போட்டி நடக்கவிருக்கிறது. மறந்துவிடாதீர்கள்… ஆஸ்திரேலியாவும் மஞ்சள் ஜெர்சியில்தான் ஆடுவார்கள். அதனால் வழக்கம்போல ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள். நீல ஜெர்சியை அணிந்து கொண்டு அலைகடலென திரண்டு வந்து ஆதரவு தெரிவியுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “ தேர்வுக்குழுவின் பணியும் எளிதானதல்ல. சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ரஜத் பட்டிதார் போன்றோர் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார்கள். இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியளிக்கக்கூடியவர்கள் இவர்கள். தினேஷ் கார்த்திக்
ஆனால், ஒருவரை அணியில் ஏன் சேர்க்கவில்லை எனக் கேட்கும்போது யாரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். அதுதான் கடினமான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/SrWD0z

0 Comments
Thanks for reading