"சர்ஃபராஸ் கான், ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாததுக்கு காரணம் இதுதான்"- ரோஹித் சர்மா

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி  டொமினிகாவில் தொடங்கியது. இதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சர்ஃபராஸ் கான்,ரிங்கு சிங் இந்நிலையில் மேற்கிந்திய தீவில் முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் ஷர்மாவிடம்  சர்ஃபராஸ் கான் மற்றும் ரிங்கு சிங்கிற்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ருதுராஜ், ஜெய்ஸ்வால் இருவரும் உள்நாட்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் அபாரமாக செயல்பட்டனர். அதனால்தான் அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக அணியில் 15-16 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் எல்லா வீரர்களுக்கும்  ஒருநாள் அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரிங்கு சிங், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு, அவர்களுக்கான நேரம் வரும்போது நிச்சயம் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.  
http://dlvr.it/Ss76GL

Post a Comment

0 Comments