இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டம், டொமினிக்காவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்திருந்தது.முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வளவு குறைவான ஸ்கோரில் ஆல் அவுட் ஆனதற்கு அஸ்வின்தான் பிரதான காரணம். அஸ்வின் இந்தச் சிறப்பான ஸ்பெல் மூலம் ஏகப்பட்ட ரெக்கார்டுகளை உடைத்திருக்கிறார். அவை இங்கே...Ashwin
- முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனர்களில் ஒருவரான தேஜ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின்தான் வீழ்த்தியிருந்தார். இந்த விக்கெட் மூலம் ஒரு அரிய சாதனையை அஸ்வின் நிகழ்த்தியிருந்தார். 2011-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியிருந்தார். சந்தர்பாலின் மகன்தான் தேஜ்நரைன் சந்தர்பால். ஆக, தந்தை மகன் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய பௌலர் அஸ்வின்தான்.
- நேற்றைய போட்டிக்கு முன்பாக அஸ்வின் சர்வதேச போட்டிகளில் 697 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நேற்றையப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வினின் விக்கெட் கணக்கு 702 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பௌலர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றார். அஸ்வினுக்கு முன்பாக அனில் கும்ப்ளேவும், ஹர்பஜன் சிங்கும் இந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர்.
- அஸ்வின் ஓடிஐ போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 479 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.Ashwin
- தனது கரியரில் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இதுவரை 33 முறை 5 விக்கெட் ஹால்களை எடுத்திருக்கிறார். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட் ஹால்களை எடுத்திருக்கும் வீரர் அஸ்வின்தான். அனில் கும்ப்ளே 34 முறை 5 விக்கெட் ஹால்களை எடுத்திருக்கிறார். அனில் கும்ப்ளே மொத்தமாக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஆனால், அஸ்வின் 92 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே அனில் கும்ப்ளேவின் 5 விக்கெட் ஹால் சாதனையை அஸ்வின் முறியடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
- வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக மட்டும் அஸ்வின் எடுக்கும் 5வது 5 விக்கெட் ஹால் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7 முறை 5 விக்கெட் ஹால்களை அவர் எடுத்திருக்கிறார். அவருடைய இந்தச் சாதனையை அவரே இந்தத் தொடரில் உடைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
நேற்றைய நாள் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய அஸ்வின்,Ashwinஎனப் பேசியிருக்கிறார் அஸ்வின்."ஒரு மனிதராகவும் ஒரு கிரிக்கெட்டராகவும் உச்சத்தைத் தொட்ட யாருமே வீழ்ச்சிகளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. வீழ்ச்சிகளைச் சந்திக்கும்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, நீங்கள் அதைப்பற்றி புகார் கூறலாம் அல்லது அந்த வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். இதில் நான் இரண்டாம் வகை!"
சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இல்லை. அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன்பிறகு அவர் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இந்தப் போட்டியிலேயே அஸ்வின் இத்தனை சாதனைகளை உடைத்திருப்பது அணியில் அவர் இருப்பது எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
http://dlvr.it/Ss6fxt
0 Comments
Thanks for reading