நடப்பு ஆஷஸ் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணியே வென்றிருக்கிறது. இரண்டாவது போட்டி நடந்தபோது கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்டரான பேர்ஸ்ட்டோ அவுட் ஆக்கப்பட்ட விதம் சர்ச்சையானது.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி செய்த ரன் அவுட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களான அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாகவும், கவுதம் கம்பீர் எதிராகவும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.Ashes 2023
அலெக்ஸ் கேரி செய்தது சரிதான் எனப் பேசியிருக்கும் அஷ்வின், ”ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஆட வேண்டியது வீரர்களின் கடமை. இங்கே விளையாட்டின் ஆன்மா குறித்துப் பேசுவதெற்கெல்லாம் வேலையே இல்லை. கீப்பர் பந்தைப் பிடித்தவுடன் ஸ்டம்பை நோக்கி எறிந்து பேட்டரை அவுட் ஆக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படும் நடைமுறை. இப்போதும்கூட பள்ளி அளவிலான போட்டிகளைப் பார்த்தால் கீப்பிங் நிற்கும் சிறுவர்கள் அதைத்தான் செய்வார்கள்.
ஒரு பேட்ஸ்மேன்தான் பந்து கீப்பரிடம் சென்று செட்டில் ஆகிவிட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ரஞ்சி போட்டிகளிலெல்லாம் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரின் அனுமதியைப் பெற்றுதான் க்ரீஸை விட்டே வெளியே வருவார்கள். ஆட்டத்தைத் தொடங்கும்போது அம்பயர் 'Let's Start' எனச் சொல்லி ஆரம்பித்து வைப்பார். அதேமாதிரி, ஒவ்வொரு ஓவர் முடிகையிலும் That's Over என்பார். அப்போதுதான் பந்து 'Dead' ஆகும். ஆனால், இங்கே ஆஷஸ் சர்ச்சையில் அம்பயர் 'over' என்றே சொல்லவில்லை.Ashes 2023
அதனால் பேர்ஸ்ட்டோவின் ரன் அவுட் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான். மேலும், நடுவரின் முடிவுதான் இறுதியானது. அதைத் தாண்டி சமூகவலைதளங்களில் 'ஆர்ம்சேர்' பண்டிதர்களாக பலரும் கிரிக்கெட்டின் ஆன்மா குறித்துக் கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" எனப் பேசியிருக்கிறார். Ashes: `ஆஸி. செய்தது சரியா?' விதிப்படி அவுட்டா, நாட் அவுட்டா? பேர்ஸ்ட்டோ விஷயத்தில் என்ன நடந்தது?கவுதம் கம்பீர்
அஷ்வின் கருத்திற்கு அப்படியே எதிராக கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ச்சர்கள் (Sledgers) என்று குறிப்பிட்டு, "கிரிக்கெட்டின் ஆன்மா என்பது உங்களுக்கும் பொருந்தும்தானே? அல்லது அதெல்லாம் இந்தியர்களுக்கு மட்டும்தானா?” என ஆஸ்திரேலிய வீரர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
http://dlvr.it/SrgJSk
0 Comments
Thanks for reading