கடந்த ஆண்டு இங்கிலாந்து BazBall முறைக்கு மாறிய பிறகு, தனக்கு வலுவான எதிரியான உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கும் வரை தொடர் வெற்றிகளையே குவித்து வந்தது.
இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெற்றது. அலையலையாய் ரசிகர் கூட்டம் குவிகின்றனர் என எழுதிக்கொண்டிருந்த இங்கிலாந்து ஊடகங்கள், இங்கிலாந்தின் இந்த இரண்டு டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு கடுமையாகச் சாடினர்.பென் ஸ்டோக்ஸ்
பேர்ஸ்டோவின் ரன் அவுட், லயன் காயத்துடன் பேட்டிங் ஆடியது, தொடர் பவுன்சர் தாக்குதல்கள் மற்றும் ஸ்டோக்ஸின் நேர்த்தியான ஆட்டம் என நடந்து முடிந்திருந்தது இரண்டாவது டெஸ்ட். மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தோற்று இந்த ஆஷஸ் தொடரைத் இழந்தால் இங்கிலாந்து ரசிகர்கள், பத்திரிகை மற்றும் முன்னாள் வீரர்கள் யாரிடமிருந்தும் இங்கிலாந்து வீரர்கள் தப்பிக்க முடியாது. இந்த அழுத்தத்துடன்தான் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த மூன்றாவது டெஸ்ட்டில் இரு அணிகளும் மூன்று மாற்றங்களாக, இங்கிலாந்து மொயீன் அலி, வோக்ஸ் மற்றும் வுட், ஆஸ்திரேலியா மார்ஷ், போலன்ட் மற்றும் மர்பி ஆகியோரைச் சேர்த்திருந்தது. லீட்ஸின் ஹெடிங்லே மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சுக்கு சாதகமான சூழலிருப்பதால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவர் சொன்னதைப் போலவே பிட்ச்சில் ஸ்விங் மற்றும் வேகத்திற்கு நல்ல ஒத்துழைப்பு இருந்தது. STUART BROAD
முதல் ஓவரில் அவுட் சைடு ஆப் வீசப்பட்ட ஐந்தாவது பந்தில் முதல் ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்து வழக்கம்போல ப்ராடிடம் தனது விக்கெட்டைக் கொடுத்து நடையைக் கட்டினார் வார்னர். தொடர்ந்து கவாஜா, லபுச்சானே, ஸ்மித் என மூவரும் சரிந்தனர். அடுத்து வந்த ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி இருவரும் இணைந்து 155 ரன்கள் சேர்த்தனர். இதில் மார்ஷ் மட்டும் 118 ரன்கள் சேர்த்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய முதல் போட்டியிலே சதமடித்து அணிக்கு தேவையான நேரத்தில் கம்பேக் கொடுத்தார்.கடைசியாக 2019 இல் அவர் விளையாடியபோது பெரும்பாலான ஆஸ்திரேலியா ரசிகர்கள் தன்னை வெறுப்பதாகவும், போதிய டெஸ்ட் வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தான் சிறப்பாக செயல்படவில்லை எனவும், தொடர் முயற்சியால் ஒரு நாள் ஆஸ்திரேலியா ரசிகர்களின் மனதை வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வோக்ஸ் வீசிய பந்து மார்ஷின் பேட்டில் பட்டு அவரது தொடையில்பட்டு ஸ்லிப்பில் கேட்சாக 118 ரன்களுடன் வெளியேறினார் மார்ஷ். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய மார்ஷின் விக்கெட்டோடு 6 விக்கெட்டுகளுக்கு 23 ரன்களே வந்தது. மார்க் வுட்டின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாத டெய்ல் எண்டர்களின் விக்கெட்டுகளைக் கைபற்றி, அவர் ஃபைபர் எடுத்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்க்வுட்டின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினர். அடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்தின் டக்கெட் மற்றும் ப்ரூக் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் கைப்பற்றினார் கம்மின்ஸ். முதல்நாளில் மட்டும் மொத்தம் 13 விக்கெட்டுகள் வீழ்ந்தது.Stokes
இரண்டாம் நாள் ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க மறுபுறம் ஸ்டோக்ஸ் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை நின்று 80 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டனாக முன்னின்று அணிக்காக மற்றொரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்டோக்ஸ். பௌலிங்கில் அசத்திய வுட் பேட்டிங்கில் அடித்து ஆடி 3 சிக்ஸர்களுடன் 24 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து கேப்டன் போலவே தன் பங்கிற்கு ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைபற்றி அசத்தினார். அடுத்து பேட்டிங் வந்த ஆஸ்திரேலியாவின் வார்னர் மீண்டும் மீண்டுமா என்பதுபோல 17வது முறையாக பிராடிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்தடுத்த ஓவர்களில் லபுசானே மற்றும் ஸ்மித் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 200வது டெஸ்ட் விக்கெட்டைப் பெற்றார் மொயீன் அலி. நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜாவின் விக்கெட்டை வோக்ஸ் கைப்பற்றினார்.
முதல் இன்னிங்சைப் போல இப்போதும் ஹெட் மற்றும் மார்ஷின் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்பட்டது. மூன்றாவது நாளில் மெல்ல தங்களது பார்ட்னர்ஷிப்பை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தபோது இந்தமுறையும் துரதிஷ்டவசமாக வோக்ஸ் விசிய பந்தை விட மார்ஷ் பேட்டை உயர்த்த கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்ததால் பேட்டில் பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு கடைசிவரை நின்று விளையாடிய ஹெட் 77 ரன்கள் எடுத்து அணியை 224 ரன்கள் வரை அழைத்துவந்து அவுட்டானார்.
மொத்தமாக இங்கிலாந்தில் வோக்ஸ், பிராட் மற்றும் வுட் சிறப்பாக பந்துவீசி மொத்த விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகள் இவர்கள் வசமே சென்றது. இங்கிலாந்து அணி 251 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது. மிகவும் எளிதான இலக்கென்றாலும் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து கவனமாக விளையாட வேண்டிய தேவை ஏற்பட்டது. மூன்றாவது நாளை விக்கெட் இழப்பின்றி 27 ரன்களுடன் நிறைவு செய்தது இங்கிலாந்து. Brookநான்காவது நாளில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கிராலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர் இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய சிறப்பாக விளையாடிய ப்ரூக் 75 ரன்கள் அடித்து இங்கிலாந்தை வெற்றிக்கு பக்கத்தில் அழைத்து சென்றார்.
ப்ரூக் மற்றும் வோக்ஸ் ஜோடி 59 ரன்கள் பார்ட்னர்ஷிப்போடு விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த இன்னிங்ஸில் தனது ஐந்தாவது விக்கெட்டாக ப்ரூக்கின் விக்கெட்டை ஸ்டார்க் கைபற்றினார். ஆனால் ஸ்டார்க்கின் முயற்சி ஏற்கனவே இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றிருந்த ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. பௌலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் வோக்ஸ் (32 ரன்கள்), வுட் (16 ரன்கள்) ஜோடி இங்கிலாந்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது. சிறப்பான பந்துவீச்சு மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்த மார்க் வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.Wood & Woakes
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ள இங்கிலாந்து அணி 1391 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து கடைசியாக 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்றது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் பேட்டிங் ரன் ரேட் 4.8 என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆஷஸ் போட்டிகளில் இது மூன்றாமிடம் (18 சிக்சர்கள்) பிடித்தது.
இவ்வளவு நாள் பேஸ் பால் பெரிதாக சோதனைக்கு உள்ளாகவில்லை ஆனால் ஆஸ்திரேலியா போன்ற பலம் பொருந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது இதற்கான எதிர்த்தாக்குதல்கள் மிகத்துல்லியமாக இருக்கும். அதனால் இந்த உத்தியை இன்னும் மெருகேற்றி, கூர்மையாக்கி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயன்படுத்தினாலே வெற்றிபெறமுடியும். இந்த வெற்றியின் மூலம் பேஷ் பாலுக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்தி வைத்துள்ளது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து, ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது இந்தத் தொடரின் இறுதியில்தான் தெரியும்.
http://dlvr.it/SryF2C
0 Comments
Thanks for reading