இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றோடு முடிந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடந்திருந்தது. இங்கிலாந்து அணி ஸ்கோரை சேஸ் செய்த சமயத்தில் அந்த அணியின் முக்கிய பேட்டரான பேர்ஸ்ட்டோவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய விதம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.Alex Carey
இங்கிலாந்து அணி ஸ்கோரை சேஸ் செய்கையில் ஆஸ்திரேலியா சார்பில் க்ரீன் 52வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பேர்ஸ்ட்டோ ஸ்ட்ரைக்கில் இருந்தார். க்ரீன் ஒரு ஷார்ட் பாலை வீச, அந்தப் பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் குனிந்து அதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். கீப்பரான அலெக்ஸ் கேரியிடம் பந்து சென்றது. உடனே அடுத்த ஓவருக்குத் தயாராகும் நினைப்பில் பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்தச் சமயத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீசி பேர்ஸ்ட்டோவை ரன் அவுட் செய்துவிட்டார். நடுவர்களும் மூன்றாம் நடுவரிடம் ரிவ்யூ கேட்டு இதற்கு அவுட் வழங்கிவிட்டனர்.
Bairstow left his crease, but the ball wasn't dead yet #ENGvAUS | #Ashespic.twitter.com/C8J8NbLeF3— ESPNcricinfo (@ESPNcricinfo) July 2, 2023
ஆனால், இந்த டிஸ்மிசல் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பேர்ஸ்ட்டோ பெவிலியனுக்குச் செல்லும் போதே இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என ஆஸ்திரேலியாவின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கோஷமிட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகைகளும் இந்த விக்கெட்டை குறித்து ஆஸ்திரேலியாவைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகைகளின் கடுமையான விமர்சனம்
இந்நிலையில், பேர்ஸ்ட்டோ அவுட்டா இல்லையா என்பது குறித்து சமூகவலைதளங்களில் கடும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐ.சி.சி விதிமுறையின் படி, 'பந்து பௌலரின் கையில் அல்லது விக்கெட் கீப்பரின் கையில் முழுமையாகத் தஞ்சமடைந்து செட்டில் ஆகும்பட்சத்திலேயே அது டெட் ஆகும்' எனக் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் அலெக்ஸ் கேரி பந்தைப் பிடித்து விட்டு செட்டில் ஆகவே இல்லை. பந்தை அப்படியே தூக்கி எறிந்து ரன் அவுட் ஆக்கிவிட்டார். இதனால் பேர்ஸ்டோவுக்கு அவுட் கொடுத்தது சரிதான் என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆட்டத்தில் ஏதோவொரு அணி, பந்து இன்னும் ப்ளேவில் (ஆட்டத்தில்) இருக்கிறது என்பதாகக் களத்தில் செயல்பட்டால் அதை எதிர் அணி மதிக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐசிசி விதிமுறைப்படி இது அவுட்தான் என்றே தெரிகிறது.ஆனால், அலெக்ஸ் கேரி செய்தது ஆட்டத்தின் ஆன்மாவைக் குலைக்கும் செயல் எனவும் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் அலெக்ஸ் கேரிக்கு ஆதரவாகக் கருத்து கூறியிருக்கிறார்.
We must get one fact loud and clear
“The keeper would never have a dip at the stumps from that far out in a test match unless he or his team have noticed a pattern of the batter leaving his crease after leaving a ball like Bairstow did.”
We must applaud the game smarts of… https://t.co/W59CrFZlMa— Ashwin (@ashwinravi99) July 2, 2023
"தனிப்பட்ட நபர் சமயோஜிதமாக சிறப்பாகச் செயல்படுவதை பாராட்ட வேண்டுமே ஒழிய அதை விளையாட்டின் ஆன்மாவோடு சம்பந்தப்படுத்தி மடைமாற்றக்கூடாது" என்றிருக்கிறார் அஷ்வின்.
பேர்ஸ்டோவின் விக்கெட்டை ஆஸி. வீழ்த்திய விதம் குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.
http://dlvr.it/SrbtT6
0 Comments
Thanks for reading