இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன் சொந்த கிராமமான சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் அகாடமி' சார்பில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியிருக்கிறார். அதை இன்று திறந்து வைத்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் யோகி பாபு, `குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடராஜன் பந்து வீச, நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, "நானும் மாநில அளவில் விளையாடிய கிரிக்கெட் வீரர்தான். இன்றையத் தலைமுறையினர் உறுதியுடன் தங்கள் கனவுகளை நோக்கித் தொடர்ந்து பயணித்தால் நிச்சயமாகச் சாதிக்கலாம். எனக்கும் இதுபோல ஒரு கிரிக்கெட் மைதானத்தைக் கட்டி நடராஜன்போல பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் அது கூடிய விரைவில் நடக்க வேண்டும்.திறப்பு விழா மேடையில் யோகி பாபு, நடராஜன்Natarajan: திரண்டு வந்த பிரபலங்கள்; நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட் திறப்பு விழா எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!
ஐ.பி.எல், டி.என்.பி.எல் போன்ற தொடர்களில் பல தமிழ்நாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் போன்ற தமிழ்நாட்டு நட்சத்திர வீரர்கள் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு நம்பிக்கை நாயகர்களாக இருக்கிறார்கள்.
எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். நடராஜனையும் ரொம்பப் பிடிக்கும். பொதுவாக கஷ்டப்பட்டு எளிமையான பின்னணியிருந்து வருபவர்களை எனக்கு ரொம்வும் பிடிக்கும். எனது அடுத்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்ததுதான். 'பொம்மை நாயகி' படம் எடுத்த ஷான் இப்படத்தை இயக்கவுள்ளார்" என்றார்.திறப்பு விழா மேடையில் யோகி பாபு, நடராஜன்
மேலும், நடிகர் விஜய் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி அறிவுறை கூறியது பற்றி பேசிய யோகி பாபு, "விஜய், தேர்ச்சிபெற்ற மாணவர்களைப் பாராட்டியதும், தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவித்ததும் பாராட்டுக்குரியது. ஓட்டுக்குக் காசு வாங்கக்கூடாது என்றும் சொல்லியிருப்பது மகிழ்ச்சி. இதை நாங்கள் `மண்டேலா' படத்திலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/Sr6xGB
0 Comments
Thanks for reading