TNPL 2023: முருகன் அஷ்வின் பிடித்த அசத்தல் கேட்ச்; இந்திரஜித்தின் அதிரடியால் வென்ற திண்டுக்கல்!

டிஎன்பிஎல் 7 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. நிஷாந்த் மற்றும் கௌஷிக் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்களுக்கிடையே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் நிஷாந்த் விக்கெட்டைக் கைப்பற்றினார் மதிவண்ணன். அடுத்து வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பிறகு சுபோத்தும் விக்கெட்டை வீழ்த்த, திண்டுக்கல் டிராகன்ஸின் பௌலிங் தீயாய் எரிய ஆரம்பித்தது. இந்திரஜித் கடைசி ஐந்து ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பிரமாதமான பௌலிங், ஃபீல்டிங் என இரண்டுமே வெளிப்பட 123 ரன்களுக்குள் சுருண்டது மதுரை அணி. எளிய இலக்கை சேஸ் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிவம் மற்றும் விமல் குமார் களமிறங்கினர். நம்பிக்கையோடு பௌலிங் செய்த குர்ஜப்நீத் சிங் இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் காலி செய்தார். மீண்டும் அடுத்த ஓவரில் ஒரு விக்கெட் எடுக்க மதுரை அணி ஆட்டத்திற்குள் கம்பேக் கொடுக்கத் தொடங்கியது. இந்த மூன்றாவது விக்கெட்டுக்கான க்ரெடிட்டை முழுக்க முழுக்க முருகன் அஷ்வினுக்கே கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு அபாரமான கேட்ச் அது. முருகன் அஷ்வினின் இந்த கேட்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முருகன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்திற்குள் நுழைந்த மதுரை அணி அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே ஆட்டத்தை கோட்டைவிட்டது. காரணம், அனுபவ வீரர்கள் முருகன் அஷ்வின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை பந்துவீசச் செய்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் விக்கெட்டுகள் வீழ்ந்து வெற்றியைக் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் கேப்டன் நித்திஷ் பத்தாவது ஓவரில் தான் முருகன் அஷ்வினை பந்துவீச வைத்தார். இதற்கிடையே திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் இந்திரஜித் நல்ல செட்டிலாகி பெரிய ஷாட்களை அடித்தார். ஆதித்யா கணேசனும் கை கொடுக்க சரிவிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கிப் பயணித்தது திண்டுக்கல் டிராகன்ஸ். சிறப்பாக விளையாடிய இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்தை சிக்ஸராகப் பறக்க விட்டார். இந்திரஜித் அதன்பின் முருகன் அஷ்வினின் சுழலிலும் சிக்காமல் தனது விக்கெட்டை விடாமல் சிக்ஸர்களும் பவுண்டர்களும் விளாசி கொண்டிருந்தார் இந்திரஜித். இந்திரஜித்தின் அபாரமான ஆட்டத்தினால் 15 ஓவரில் 123 ரன்களை சேஸ் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடிய இந்திரஜித் நான்கு சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடித்து 78 ரன்கள் சேர்த்திருந்தார்.
http://dlvr.it/Sqv290

Post a Comment

0 Comments