TNPL 2023: அஜிதேஷ் சதம்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!

டிஎன்பிஎல் 7 வது சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.சச்சின் மற்றும் சுரேஷ்குமார் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலே சோனு யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சச்சின்.TNPL லைகா கோவை கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன சாய் சுதர்சன் மற்றும் சுரேஷ்குமார் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தனது அதிரடி ஆட்டத்தை காட்டிய சாய் சுதர்சன் 35 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். எதிரே வரும் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவேளையில் அவுட் ஆக, சாய் சுதர்சன் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 90 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 19வது ஓவரில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். சாய் சுதர்சன், கடந்த ஆட்டத்திலும் ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து இருந்தது லைகா கோவை கிங்ஸ் அணி. நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக நிரந்தன் மற்றும் அருண் கார்த்திக் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே அருண் கார்த்திக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சி.அஜிதேஷ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 58 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார்.ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவரான அஜிதேஷ், அவரது கல்லூரியிலேயே சதம் அடித்தது முக்கிய நிகழ்வாக இருந்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஜிதேஷ் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களம் இறங்கிய பொய்யாமொழி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 20 ஓவர் இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
http://dlvr.it/SqrWR2

Post a Comment

0 Comments