டிஎன்பிஎல் 7வது சீசன் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நடந்த லீக் போட்டியில், ஐ ட்ரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் சாய் கிஷோர் "நாங்கள் பெரிய ஸ்கோர் அடித்து சேப்பாக் அணிக்கு அழுத்தத்தைக் கொடுப்போம்" என்று நம்பிக்கையுடன் பேசினார் கேப்டன்.திருப்பூர் அணிநடராஜன், வருண், வாஷிங்டன்... திறமைகளை மேடையேற்றிய டிஎன்பிஎல் தொடங்கியது எப்படி?! #TNPL
ஆனால் போட்டியில் நடந்த கதையோ வேறு. டாஸை வென்ற திருப்பூர் அணி அதன் பிறகு போட்டிக்குள் வரவே இல்லை. பவர் பிளேக்குள்ளே 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறியது.
பேட்ஸ்மேன்களிடம் பெரிய ஸ்கோருக்கான இன்டென்ட் துளியும் தென்படவில்லை. சேப்பாக் அணி பௌர்கள் தங்களது சிறப்பான பௌலிங்கால், திருப்பூர் அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். 4வது விக்கெட்டுக்கு விஜய் சங்கரும், ராதாகிருஷ்ணனும் க்ரீஸில் நிலைத்து நின்றாலும், ரன்கள் வந்து சேரவில்லை. பவுண்டரிகள் அடிக்காமல், சிங்கிள்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். திருப்பூர் அணி
“எங்க டீம் டெத் ஓவர்ல கலக்குவாங்க.. பாருங்க.” என திருப்பூர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார்போல இருவரும் 2 பவுண்டரிகளை விளாசினர். “இதற்கு மேல் எங்கக் கிட்ட எதிர்பார்க்காதீங்க.” என்பதுபோல, இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர்.
விஜய் சங்கர் 28 ரன்கள், ராதாகிருஷ்ணனும் 36 ரன்களை எடுத்திருந்தனர். ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக பட்டையை கிளப்பிய விஜய் சங்கர் மீது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் அவர் பேட்டிங் அதை பூர்த்தி செய்யவில்லை. அதேபோல சாய் கிஷோரும் சிறப்பாக ஆடவில்லை. கடைசி ஓவரில் விவேக்கின் குட்டி கேமியோவால் 17 ரன்கள் வந்து சேர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணிக்கு, 121 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருப்பூர்.திருப்பூர் அணிதிருப்பூர் அணி
“இந்த பிட்ச்லயா இவ்வளவு நேரம் உருட்டிட்டு இருந்தீங்க. இப்பப் பாருங்க மேட்சை எவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டுக் கிளம்பறோம்.” என்பது போல சேப்பாக் அணி பவர்பிளேவில் நன்றாகவே ஆடியது. ஜெகதீசன் 13 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரதோஷ் இந்தப் போட்டியிலும் சில நல்ல ஷாட்களை ஆடினார்.
அவருடன் இணைந்த அப்ராஜித் வானவேடிக்கை காட்ட ரன்கள் எந்தத் தடையும் இல்லாமல் வந்து கொண்டிருந்தன. ப்ரதோஷ் அவுட்டாக, அடுத்த வந்த சஞ்சய் யாதவும் சிறு கேமியோ ஆடி வெளியேறினார். அப்ராஜித் மறுபக்கம் திருப்பூர் அணி பந்து வீச்சை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் 15 ஓவர்களிலேயே, டார்கெட்டை சேஸ் செய்து 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சேப்பாக் அணி.சேப்பாக் அணிசேப்பாக் அணிசேப்பாக் அணி
அப்ராஜித் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்திருந்தார். சேப்பாக் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் திருப்பூர் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
http://dlvr.it/SqpYrW

0 Comments
Thanks for reading