TNPL 2023:`தொடர்ச்சியாக 5 அரைசதங்கள்' - அதிரடி ஃபார்மில் சாய் சுதர்சன்; சேப்பாக்கை வீழ்த்திய கோவை!

டி.என்.பி.எல்லின் நேற்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. வழக்கம்போல இந்த சீசனில் முதல் பேட்டிங் ஆடும் அணி 20 ஓவர்களில் 120-130 ரன்கள் மட்டுமே எடுக்கும். இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி 15 ஓவர்களில் எளிமையாக சேஸ் செய்து வெற்றி பெற்றுவிடும். இதே கதைதான் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. டாஸ் வென்ற லைகா கோவை, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை பேட்டிங் ஆட சொன்னது. கேப்டன் ஜெகதீஷ் மற்றும் ப்ரதோஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கோவை அணியின் அட்டாக்கிங் பௌலிங்கால் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர் சேப்பாக் அணியின் பேட்ஸ்மேன்கள். கடந்த போட்டியில் 46 ரன்களை விளாசிய அப்ராஜித், சித்தார்த்தின் அசத்தலான ரன் ஆவுட்டினால் 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன் பிறகு ஹரிஷ் குமார், சசிதேவ் நிதானமாக ஆடியதால் மத்திய ஓவர்களில் ஓரளவு ரன்கள் வர ஆரம்பித்தன. டெத் ஓவர்களில் இவர்களின் கூட்டணி தொடர, ஹரிஷ் குமார் அபாரமாக மூன்று சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரில் ஹரிஷ் அதிரடி காட்ட, 126 ரன்களை எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லிஸ். யூதேஷ்வரன் சிறப்பான லைன் அண்ட் லென்த்தில் அபாரமாக பந்து வீசிய வள்ளியப்பன் யூதேஷ்வரன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா என்ற எதிர்பார்ப்புடன் சேஸ் செய்ய வந்த கோவை கிங்ஸூக்கு சாய் சுதர்சன் மீண்டும் ஒரு மிரட்டலான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார். ஒன் டவுனில் சாய் சுதர்சன் களமிறங்கினார். கோவை மண்ணில் நிகழ்த்திய அதிரடி ஆட்டத்தை திண்டுக்கல்லிலும் நிகழ்த்தினார் சாய் சுதர்ஷன். சாரல் மழையினால் பிட்ச் கண்டிஷன் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைய, நல்ல செட்டிலாகிய சுரேஷ்குமார் மற்றும் சாய் சுதர்ஷன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.Kovai இருவரும் சேப்பாக் பௌலர்களிடம் விக்கெட்டை இழக்காமல் அட்டாக் நிகழ்த்த, ரன்களும் வேகமாக உயர்ந்தது. நன்கு விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ்குமார் அரை சதத்தை தவறவிட்டு 47 ரன்களின் வெளியேறினார். அடுத்து சாய் சுதர்ஷனின் அதிரடி ஆட்டம் தொடர, இந்தத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை விளாசினார். சாய் சுதர்ஷனின் வின்னிங் ஷாட்டுடன் 126 ரன்களை எளிமையாக சேஸ் செய்தது லைகா கோவை. சுரேஷ்குமார், சாய் சுதர்சன் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைய, இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றியை ருசித்தது லைகா கோவை கிங்ஸ். சேப்பாக் அணியை பொறுத்தவரை பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சொதப்பியிருந்தது.Sai Sudharsan இந்த ஆட்டத்தின் மூலம் சாய் சுதர்ஷன் மீண்டும் ஒரு அதிரடி நாயகனாக உதயமாகிருக்கிறார். இவர் விளையாடிய கடைசி ஐந்து டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்களை அடித்திருக்கிறார். ஐ. பி. எல்லில் 2 அரை சதங்கள், டி.என். பி. எல்லில் 3 அரை சதங்கள் என மிரட்டலான ஃபார்மில் இருக்கிறார் சாய் சுதர்சன்.
http://dlvr.it/SqxNWg

Post a Comment

0 Comments