TNPL: சொதப்பிய சேப்பாக்; தொடக்கம் முதலே அசத்திய கோவை கிங்ஸுக்கு 2-வது வெற்றி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் 7வது சீசனின் போட்டி ஒன்று நடைபெற்றது. டிஎன்பிஎல் தொடரின் 200வது மேட்ச்சான இது, லைகா கோவை கிங்ஸ் அணிக்கும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும் இடையேயான யுத்தமாக இருந்தது. இவ்விரு அணிகளும் கடந்த டிஎன்பிஎல் சீசன் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணிகள் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகவே இது இருந்தது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பெளலிங்கைத் தேர்வு செய்தது. சேப்பாக் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக பிரதோஸ் ராஜன் பால், ஜெகதீசன் இறங்கினர். வேகம் எடுக்காத ஆட்டமாகவே தங்களின் இன்னிங்ஸைத் தொடங்கினர். ஜெகதீசன் 4 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் பெளர் சித்தார் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொதப்பினர்.பந்தைத் தாவி பிடிக்க முயன்ற வீரர் ஐந்து விக்கெட்களுக்குப் பிறகு களமிறங்கிய சசிதேவ், ஹரிஷ்குமார் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்தனர். இதில் ஹரிஷ்குமார் 3 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடித்து 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அரை சதம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியில் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.  மைதானத்தில் லேசான தூறல் விழுந்து கொண்டிருந்த நிலையில் லைகா கோவை கிங்ஸ் அணியின் சுரேஷ் குமார், சச்சின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இறங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிக் கொண்டிருந்த நிலையில் சச்சின் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதன்பிறகு இறங்கிய சாய் சுதர்ஷன், சுரேஷ் குமாருடன் பவுண்டரிகளாக அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து 52 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 17 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் அடித்தனர். இதனால் ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்ற வீரர் கடைசியாக 3 ரன் தேவை இருந்த நிலையில் சாய் சுதர்ஷன் பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார். அவர் மட்டும் 43 பந்துகளுக்கு 64 ரன்களை எடுத்தார். இந்த சீசனில் அவர் 5 போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 16.3 ஓவர்களில் 128 ரன்களை அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வென்றது. அந்த அணியின் பந்துவீச்சாளர் யுதீஸ்வரன் 3 விக்கெட்களை வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
http://dlvr.it/Sr0L4L

Post a Comment

0 Comments