வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சர்ஃபராஸ் கான்
இதனிடையே கடந்த வருடம் ரஞ்சி கோப்பையில் வீரர்களின் செயல்பாடுகளைப் பார்ப்பதற்காக மைதானத்திற்கு நேரில் சென்றிருந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவை நோக்கிச் சதமடித்த சர்பராஸ் கான் கையை நீட்டிக் கொண்டாடி நன்னடத்தையின்றி நடந்து கொண்டதாலேயே தொடர்ந்து அவர் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாததற்கு அவரது கிரிக்கெட் திறன் மட்டும் காரணம் கிடையாது. களத்திலும், களத்திற்கு வெளியேவும் அவரது செயல்பாடுகள் சரியானதாக இல்லை. பிசிசிஐ
போட்டியின் போது மைதானத்தில் அவர் ஆக்ரோஷமாகக் கொண்டாடும் விதத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். சர்ஃபராஸ் கானுக்குக் கட்டுப்பாடு தேவை. மேலும் அவர் உடல் எடையைக் குறைக்க வேண்டும். அடுத்தடுத்த சீசன்களில் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஒருவரை, அணியில் எடுக்கத் தெரியாத அளவிற்கு நாங்கள் முட்டாள் அல்ல" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
http://dlvr.it/SrF7Nh
0 Comments
Thanks for reading