பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் ரசிகர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 30 வயதான ரசிகர் ஒருவர் அவருக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தினால் தனது சொத்து முழுவதையும் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு எழுதி வைத்திருக்கிறார். இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களிடம் பகிர்ந்த அவர், “நெய்மரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைப் போல நானும் நிறைய அவதூறுகளைச் சந்திருக்கிறேன். அவருக்கு நடந்த பல விஷயங்கள் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் தந்தையுடன் அவருக்கு இருக்கும் அந்த உறவும், இணக்கமும், இறந்துப்போன எனது தந்தை உடனான பல விஷயங்களை எனக்கு நினைவூட்டுகிறது.நெய்மர்
தற்போது எனது உடல்நிலை சரியில்லை. அதனால் என் சொத்துக்களை அரசாங்கமோ அல்லது எனக்கு நெருக்கம் இல்லாத உறவினர்களோ எடுத்துச் செல்வதை நான் விரும்பவில்லை.
அனைத்திற்கும் மேலாக, நெய்மர் பேராசைக் கொண்டவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். அதனால் அவருக்கு எனது சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நெய்மர்
நெய்மரைப் பொறுத்தவரை தற்போது PSG ( paris saint-germain ) அணிக்காக விளையாடி வருகிறார். உலக அளவில் சிறந்த ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின் படி, 2023 ஆம் ஆண்டில் மட்டும் 85 மில்லியன் டாலர் வருவாயை அவர் ஈட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SrSDRL

0 Comments
Thanks for reading