அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்.ரவி சாஸ்திரி
இதுகுறித்து பேசிய அவர், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியை மனதில் வைத்துக்கொண்டு முழங்கால் நடுக்கத்துடன் 50 ஓவர் உலகக்கோப்பையை அணுகக்கூடாது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியால் முடியும். அதற்குச் சரியான இளமையும் அனுபவமும் கொண்ட அணிதான் தேவை. இப்போது அப்படியான அணியைக் கொண்டு வருவதற்கான நேரமும் கொஞ்சம் இருக்கிறது. நீங்கள் உங்களுடைய முழு பலத்தைப் பெற்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவோடு இந்தியாவும் போட்டியில் இருக்கும்."Sarfaraz Khan: "இதனால்தான் நாங்கள் சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் எடுக்கவில்லை!"- பிசிசிஐ அதிகாரி
மேலும் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதால் 'Chokers' என்ற பெயர் பெற்றிருப்பது குறித்துப் பேசியவர், "நான் இந்திய வீரர்களை அப்படி நினைக்கவில்லை. பெரிய போட்டிகளை வெல்ல வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த முயற்சியும் செயல்பாடும் தேவை. இதற்காக நீங்கள் ஒரு தனி நபர் அல்லது கேப்டனைக் குறை சொல்ல முடியாது. இந்திய அணி
பெரிய போட்டிகளில் உங்களுக்கு பேட்ஸ்மேன்களிடமிருந்து சதம் தேவை. பிறகு பந்துவீச்சாளர்கள் அந்த ரன்களை வைத்துக் கொண்டு வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கும் பொழுது கோப்பையை வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/SrGThC
0 Comments
Thanks for reading