"இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏற்புடையதல்ல!" - சவுரவ் கங்குலி

வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், ரஞ்சி கோப்பையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சர்ஃபராஸ் கான் இதுகுறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை போன்ற போட்டிகளில்  ஜெய்ஸ்வால் ஏராளமான ரன்களைக் குவித்திருக்கிறார். அதனால் அவர் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் சரியான தேர்வுதான். ஆனால் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளாசி இருக்கும் ரன்களுக்காவே அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் அபிமன்யூ ஈஸ்வரனும் கடந்த 5 ஆண்டுகளாக அதிக ரன்களை விளாசி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும். சர்ஃபராஸ் கான் சர்ஃபராஸ் கானுக்கு வேகப்பந்தை எதிர்கொள்வதில் பிரச்னை இருக்கிறது என்று கூறுவதை நான் ஏற்கமாட்டேன். அப்படி அவருக்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பிரச்னை இருந்தால், இந்தியா முழுக்க அனைத்து மைதானங்களிலும் அவரால் ரன்கள் சேர்த்திருக்க முடியாது. அதனால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்று கங்குலி தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SrT4zT

Post a Comment

0 Comments