ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
தொடக்க நாள் முதல் சுவாரஸ்யத்துக்குத் துளியும் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது இப்போட்டி. Bazball ஆட்டமுறையை மிகத்தீவிரமாக செயல்படுத்திவரும் இங்கிலாந்து அணி முதல் நாளில் மட்டும் 396 ரன்களை அடித்து டிக்ளேரும் செய்தது.Usman Khawaja
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தாலும் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்நிலையில் சதத்தை கடந்து மிகச் சிறப்பாக ஆடி வந்த கவாஜாவை 141 ரன்களுக்கு போல்ட் செய்தார் ராபின்சன். அவரை வீழ்த்துவாதற்காக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த ஃபீல்ட் செட்டிங் ரசிகர்கள் பலராலும் சிலாகித்து பேசப்பட்டது.
ஸ்டோக்ஸின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
ஆஸ்திரேலிய பேட்டர் க்வாஜா தன் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே சிறந்த கன்ட்ரோலுடன் ஆடினார். அவருக்கெதிராக இங்கிலாந்து அணியினர் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் இரண்டாம் நாள் முழுவதும் துளியும் எடுபடவில்லை. BRUMBRELLA
இதனால் மூன்றாவது நாளில் க்வாஜாவுக்கு எதிராக ஒரு வினோத ஃபீல்ட் செட்டை அமைத்தார் ஸ்டோக்ஸ். தனக்கு வீசப்படும் அவுட்சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளை சிறப்பாக அக்ராஸில் ஆடக்கூடியவர் கவாஜா. மேலும் புல் ஷாட்டும் அவரின் பலங்களுள் ஒன்று. இதனால் கல்லி, மிட்-ஆப் மற்றும் கவர் பாயிண்ட் ஆகிய இடங்களில் பீல்டர்களை நிறுத்திய ஸ்டோக்ஸ் அவுட்சைட் ஆப் ஸ்டம்ப் திசையில் சிறந்த லைனில் பந்துகளை வீசுமாறு தன் பௌலர்களை அறிவுறுத்தினார்.
இதற்கு ஒரு படி மேலே போய் ராபின்சன் வீசிய 113-வது ஓவரில் ஷார்ட் மற்றும் சில்லி மிட் ஆப், ஷார்ட் மற்றும் சில்லி மிட் ஆன் என மொத்தம் ஆறு பீல்டர்களை கவாஜாவிற்கு முன் அரண் போல அமைத்தார் ஸ்டோக்ஸ். முதல் பந்தை லெக் சைடில் வீசிய ராபின்சன், இரண்டாம் பந்தை ஸ்டம்பிற்கு வீச அதை டிபெண்ட் செய்தார் க்வாஜா. மூன்றாவது பந்து யார்க்கர், அப்பந்து ஆஃப் ஸ்டம்பை மிஸ் செய்தது. அடுத்த பந்தில் டவுன் த கிரீஸ் இறங்கி வந்து ஆட நினைத்த கவாஜாவிற்கு மீண்டுமொரு யார்க்கர் வீச, அதை Third man திசையில் ஆட முயன்று போல்டனார். க்வாஜாவின் விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ் செய்த Brumbrella பீல்ட் செட் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது.
அதென்ன ‘BRUMBRELLA’ ?
1981-ம் ஆண்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தின் ஆடுகளத்தை காப்பதற்காக அதன்மீது விரிக்கப்பட்ட தார்பாய்க்கு பெயர் Brumbrella. பர்மிங்காம் நகரின் சுருக்கமான ‘Brum’ என்ற சொல்லுடன் Umbrella-வை இணைத்து Brumbrella என இது அழைக்கப்படுகிறது. 1981-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்த Brumbrella தார்பாய் அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கி பிட்ச்சில் ஈரப்பதத்தை அதிகளவில் தங்கவைத்து சேதம் விளைவிப்பதாக வீரர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், 2001-ம் ஆண்டோடு Brumbrella-வின் பயன்பாடு முடிவுக்கு வந்தது.
இறுதிக்கட்ட பரபரப்பு
இன்று தொடங்கும் கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை 174 ரன்கள். ஸ்மித், லேபுஷேன் இருவரும் பெவிலியன் திரும்பியிருக்க கவாஜாவின் விக்கெட்டே இன்றைய நாளில் இங்கிலாந்தின் முதன்மை டார்கெட்டாக இருக்கும். அதற்கேற்ற வகையில், முதல் இன்னிங்ஸை போல Brumbrella ஃபீல்டை அமைத்து அவரை அச்சுறுத்தி வருகிறார் ஸ்டோக்ஸ். இறுதி யுத்தத்தில் கரைசேர போவது யார் ?
http://dlvr.it/Sqxqyy

0 Comments
Thanks for reading