"இது போன்ற வெற்றிக்கு 13 - 14 வருடங்கள் கூட காத்திருப்பேன்!"- சூப்பர் ஓவரில் கலக்கிய லோகன் வான் பீக்

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. ஆனால் நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.West Indies vs Netherland நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் லோகன் வான் பீக் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் வீசிய 6 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களை அடித்தார். அதன்பின் அவரே நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் பந்துவீச, அதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இப்போட்டியில் லோகன் வான் பீக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அவர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். லோகன் வான் பீக் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய லோகன் வான் பீக், “வெற்றி பெற்ற இந்தத் தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற சில திட்டங்களை வகுத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைத்தோம். 13 - 14 வருடங்களாகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். பல போட்டிகளில் வெற்றி தோல்விகளைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/SrJrGw

Post a Comment

0 Comments