பிசிசிஐ-யின் உறுப்பினர்களின் பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பான புதிய சட்ட விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் பிசிசிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கிரிக்கெட் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ முன்மொழிந்துள்ள சில சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.கங்குலி, ஜெய் ஷா
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிசிசிஐ ஒரு தன்னாட்சி அமைப்பு என்றும் அதன் அனைத்து மாற்றங்களும் ஏஜிஎம் மூலம் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் தங்களால் மேலாண்மை (Micro-manage) செய்ய முடியாது என்றும் கூறியது. இதையடுத்து பிசிசிஐ-யின் புதிய சட்டத் திருத்தங்களுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதன்படி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிற நிர்வாகிகள் தங்களது பதவிகளில் மேலும் 3 ஆண்டுகள் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக பதவியில் தொடரும்படி புதிதாக அமைக்கப்பட்ட பிசிசிஐ சட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி.! #BCCI | #SouravGanguly | #JayShah pic.twitter.com/oCZlWQdR3x— Sports Vikatan (@sportsvikatan) September 14, 2022
முன்னதாக உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசிசிஐ அரசியலமைப்பின் படி, மாநில சங்கத்திலோ அல்லது பிசிசிஐயிலோ தொடர்ந்து பதவி வகித்தவர்கள் மூன்று ஆண்டுகள் 'கூலிங்-ஆஃப் பீரியட்' காலத்தை நிறைவு செய்தபின்தான் சங்கத்தின் பிற தேர்தல்களில் போட்டியிட முடியும்.
தற்போது அந்தச் சட்டம் மாற்றப்பட்டு ஒரு தனிநபர் மாநில சங்கத்தில் இரண்டு முறை, தலா மூன்று ஆண்டுகள் பணியாற்றலாம். அதன்பின்னர் கூலிங்-ஆஃப் பீரியட் காலத்திற்குச் செல்வதற்கு முன் இரண்டு முறை பிசிசிஐ உறுப்பினராக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
http://dlvr.it/SYM8Bs
0 Comments
Thanks for reading