தன் உடலாலும் மனதாலும் நம்மை வியக்க வைக்கிறார் மஹராஷ்டிராவை சேர்ந்த ப்ரதீக் மோஹித். 3 அடி பாடி பில்டரான இவர் 2022-ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
25 வயது இளைஞரான மோஹித் 3 அடி 4 அங்குலம் (102 செ.மீ) மட்டுமே உயரம் இருக்கும் மனிதர். தனது உயரக் குறைவால் பல கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியிருக்கிறார். சுற்றி இருந்தவர்கள் பலரின் கேலியாலும் வருந்தியவர், தன்னம்பிக்கையுடன் உழைத்து தன்னை நிரூபிக்க முடிவு செய்தார்.ப்ரதீக் மோஹித்
Also Read: மதுர மக்கள்: "டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை!"- வழிகாட்டும் நாராயணன்
பிறக்கும்போதே மோஹித்துக்கு இயல்பைவிட சிறிய கைகளும், கால்களும் இருந்துள்ளன. வளரும்போது சரியாகிவிடும் என அவர் பெற்றோர் எண்ண, ஏமாற்றமே மிஞ்சியது. குழந்தைப் பருவத்தில் இருந்தே அவரது உயரம் குறித்த கேலிகளும் கிண்டல்களும் அவரை துரத்தத் தொடங்கின.
இளைஞனாக வளர்ந்த மோஹித் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானார். இவற்றில் இருந்து மீண்டு வர எண்ணியவர், 16 வயதில் உடற்பயிற்சி மையத்தில் இணைந்தார். உடற்பயிற்சி செய்வது விருப்பமாக அமையவே ஆர்வத்துடன் தனது உடலை மெருகூட்டினார். தொழில் முறை பாடி பில்டராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மோஹித்.ப்ரதீக் மோஹித்
Also Read: 107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்; அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் கின்னஸ் சாதனை!
ஆரம்பத்தில், டம்பெல்ஸ் முதலான அதிக எடை கொண்ட பொருள்களை தூக்கக் கஷ்டப்பட்ட மோஹித்துக்கு பாடி பில்டராக உருவெடுப்பது மிகக் கடினமான பயணமாக இருந்தது. என்றாலும் விடா முயற்சியுடன் தன் உடலைத் தயார்படுத்தினார். தன் உழைப்பின் பலனாக உருவான உடற்கட்டை பார்க்கும் போது எழும் புத்துணர்ச்சி, அவருக்கு மேலும் ஊக்கம் அளித்தது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார் மோஹித். தற்போது 2022 கின்னல் புத்தகத்தில், உலகிலேயே குள்ளமான பாடி பில்டர் என்னும் ரெக்கார்டுக்குச் சொந்தக்காரராகி அசத்தியிருக்கிறார்.
தன்னை அண்ணாந்து பார்க்கவைத்துவிட்டார் உலகத்தை!
http://dlvr.it/S8cZJk

0 Comments
Thanks for reading